2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வரதட்சணை பெற்றால் பட்டம் பறிபோகும்

Freelancer   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரதட்சணை வாங்கமாட்டோம் என உறுதி கொடுத்தால் மட்டுமே இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ள கோழிக்கோடு பல்கலைக்கழகம், இந்த உறுதிமொழியை மீறினால் பட்டத்தைத் திரும்பப் பெறலாம் என்று மாணவரிடம் கையெழுத்து பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துக் கோழிக்கோடு பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்குச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
 
கேரளாவில் அண்மையில் வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட குடும்ப வன்முறையால் மரணங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்ததை அடுத்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் இந்த யோசனையை முன்மொழிந்துள்ளார்.

அதன்படி, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கல்வி நிறுவனங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும்.

இதற்காகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களிடமும், பெற்றோரிடமும் உறுதிமொழிப் படிவத்தைப் பெறவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .