Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 19 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் எதிர்வரும் 24ஆம் திகதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு நேற்று (18) நடந்தது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக (பா.ஜனதா கூட்டணி) திரவுபதி முர்மு, எதிர்க்கட்சி சார்பில் (காங்கிரஸ் கூட்டணி) யஷ்வந்த் சின்கா வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் வாக்களிக்க முதலில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க)வுக்கும், அதனை தொடர்ந்து எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அ.தி.மு.க) உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது.
சட்டசபையில் தி.மு.க.வுக்கு 125 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ்-18, ம.தி.மு.க.-4, விடுதலை சிறுத்தைகள்-4, இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-1, தமிழக வாழ்வுரிமை கட்சி-1 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
அ.தி.மு.க.வில் உள்ள 65 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிசாமி அணியில் 62 எம்.எல்.ஏ.க்கள், ஓ.பன்னீர் செல்வம் அணியில் 3, பா.ம.க.-5, பா.ஜனதா-4, புரட்சி பாரதம்-1 ஆகியோர் உள்ளதால் இவர்கள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .