2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

விண்வெளிக்கு செல்லும் ‘வயோமித்ரா’

Freelancer   / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். பூமியில் இருந்து, 400 கிலோ மீட்டர்தொலைவில் மூன்று நாட்கள் விண்வெளியில் இவர்கள் ஆய்வு செய்வர். பின்னர் மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்படுவர்.

ககன்யான் திட்டத்தில் மனித பாதுகாப்பு மிக முக்கியமானது. இதை உறுதி செய்வதற்காக, பொறியியல் அமைப்புகள் மற்றும் மனித மைய அமைப்புகளை உள்ளடக்கிய பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. LVM3 – HLVM3 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

பெங்களூரில் நிறுவப்பட்ட விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் வகுப்பறை பயிற்சி, உடல் தகுதி பயிற்சி, சிமுலேட்டர் பயிற்சி மற்றும் விமான உடை பயிற்சி ஆகியவற்றை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சுற்றுப்பாதை தொகுதி தயாரிப்பு முடிந்து, ககன்யான் ஏவுதளத்தை மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் 2வது சோதனையில் “வியோமித்ரா” என்ற பெண் ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X