2025 ஜூலை 19, சனிக்கிழமை

விதைப்பையை நசுக்குவது கொலை முயற்சியாக கருதப்படாது

Editorial   / 2023 ஜூன் 29 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விதைப்பையை நசுக்குவது கொலை முயற்சியாக கருதப்படாது என கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பேசுபொருளாக மாறியுள்ளது.

கர்நாடகா மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் மேல் முறையீட்டு மனு தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பு விவாதத்தை கிளப்பியுள்ளது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகாவின் சிக்மகளூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓம்காரப்பா. 2010இல் அங்கு நரசிம்மசாமி கோயில் திருவிழா ஊர்வலத்தில் ஓம்காரப்பா பாடல்களுக்கு ஜாலியாக நடமாடி வந்துள்ளார். அப்போது உற்சாக மிகுதியில் சாலையில் வந்தவர்களை வழிமறித்த படி ஓம்காரப்பா ஆட்டம் போட்டுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த பரமேஷ்ரவப்பா என்பவரையும் அவர் வழிமறிக்கவே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அது அடிதடியாக மாறியுள்ளது. இந்த சண்டையின் போது ஓம்காரப்பாவின் விதைப்பைகளை நசுக்கி பரமேஷ்ரவரப்பா தாக்கியுள்ளார்.   பாதிக்கப்பட்ட விதிப்பையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. பரமேஷ்வரப்பாவின் மீது கொலை முயற்சி பிரிவிலும் வழக்கு பதிவு செய்தது. வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் 2012இல் பரமேஷ்ரவாவை குற்றவாளி என தீர்ப்பளித்த 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக பரமேஷ்வரப்பா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செயதார். இந்த மேல் முறையீட்டு மனுவின் தீர்ப்பை  உயர் நீதிமன்றம் வழங்கியது. உயர் நீதிமன்ற நீதிபதி கே நடராஜன் வழங்கிய அந்த தீர்ப்பில், "உடலில் விதைப்பை முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புதான். பாதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை செய்து விதைப்பை அகற்றப்பட்டது.

இருப்பினும், தாக்குதலில் ஈடுபட்ட நபர் கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தில் அதை செய்ததாக பார்க்க முடியாது. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் அவர் தன்னுடன் ஆபத்தான ஆயுதங்களை எடுத்து வந்திருப்பார். எனவே, கொலை முயற்சியாக இதை பார்க்க முடியாது என தீர்ப்பு வழங்கினார். எனவே, பரமேஷ்வராவுக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டு சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X