2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வினையான ‘விக்’

Freelancer   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாம்பரம் அருகேயுள்ள சோமங்கலத்தை அடுத்த அமரம்பேடு கிராமத்தில் திருமணம் செய்த ஜோடியில், திருமணப் பெண்ணொருவர், எட்டு மாதங்களுக்குப் பின்னர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

அப்பெண், தன்னுயிரை மாய்த்துக் கொள்ளவில்லை ​கொலைச் செய்யப்பட்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதனையடுத்து மணமகன் வீட்டார் கைது செய்யப்பட்டனர்.

மணமகனுக்கு வழுக்கைத் தலை இதனால் பலரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.இதனால். தன்னுடைய வழுக்கைத் தலையை விக் (செயற்கை முடி) மூலம் மறைத்தார்.

திருமணத்தின்போது பந்தாவாக விக்கை வைத்து மணப்பெண்ணையும் அந்த குடும்பத்தையும் ஏமாற்றி உள்ளனர்.

 சில தினங்களுக்குப் பிறகு தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மனைவி   எண்ணெய் தேய்க்க முயன்றபோது கணவன் மறுத்திருக்கிறார்.

மருமகன் வெட்கப்படுவதாக மணமகளும் குடும்பத்தினரும் எண்ணி உள்ளனர். ஆனால், உண்மையை பல நாள்கள் மறைக்க முடியாது என்பதுபோல,  வழுக்கைத் தலையை ஒருநாள் பெண் பார்த்துவிட்டார். அதனால் மனமுடைந்த பெண், `ஏன் உண்மையை மறைத்துவிட்டீர்கள்?' என்று  கேட்டிருக்கிறார்.

அதற்கு  `நீங்கள் வாக்குறுதி அளித்தபடி வரதட்சணையாக நகைகளைக் கொடுக்காமல் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்' என மணமகன் சண்டை போட்டிருக்கிறார்.  இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது. 

சம்பவத்தன்று ஆத்திரமடைந்த கணவன், மனைவியைத் தாக்கி உள்ளார். இதில் அவர் உயிரிழந்துவிட்டார். அதன்பின்னரே தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என குடுபத்தினர் நாடகமாடியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .