2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வெடிகுண்டு கொள்ளையனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

Ilango Bharathy   / 2023 மே 21 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நபர் ஒருவர்  வெடிகுண்டுடன் வங்கியொன்றுக்குக் கொள்ளையடிக்கச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டத்தில் உள்ள  ஜி டி மெட்லா நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தன்று வங்கிக்குள் புகுந்த  குறித்த நபர் சினிமாவில் காண்பிக்கப்படுவது போன்ற போலி வெடிகுண்டு ஒன்றை உடலில் கட்டிக் கொண்டு உள்ளே சென்றுள்ளார்.

தனக்கு உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும் கொடுக்க தவறினால் குண்டை வெடிக்க செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைக் கேட்டு  முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பார்ப்பதற்கு போலி வெடிகுண்டு போல இருந்ததால் உஷாரான வங்கியில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடிகொடுத்துள்ளனர்.

பின்னர் இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் குறித்த நபரைப் பிடித்து விசாரித்ததில்” அவரது பெயர் சிவாஜி என்பதும்  அவர் பல்வேறு நிறுவனங்களில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து விட்டு தற்போது பார்வை கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றார் என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன்” சுலபமாக பணம் சம்பாதிக்க முடிவு செய்தே இவ்வாறு வங்கியில் கொள்ளையிட முயற்சி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்  அந்நபரை கைது செய்துள்ள பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர்  சிறையில் அடைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X