2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஸ்டாலினுக்கு குலாம் நபி ஆசாத் புகழாரம்

Freelancer   / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தந்தை போலவே மகன் இருப்பதாகவும், நாட்டின் சிறந்த முதல்வர் ஸ்டாலின் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னைக்கு இன்று (03) விஜயம் மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். 

இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றதுடன், முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மக்களவை எம்.பி.யும், திமுக மகளிரணித் தலைவருமான கனிமொழி, எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வரைச் சந்தித்த குலாம் நபி ஆசாத், ''நாட்டின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது செயல்பாடுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றன. நாளொன்றுக்கு முதல்வர் ஸ்டாலின் 18 முதல் 19 மணி நேரம் உழைக்கிறார். தந்தை கருணாநிதி போலவே மகனும் இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .