2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஹைதராபாத்தில் ஒரு கிளாஸ் டீ ரூ.1,000

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹைதராபாத்

நட்சத்திர ஹோட்டல்களில் கொபி, டீ போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால், ஹைதராபாத்தில் நடுத்தர ஹோட்டல் ஒன்றில் ஒரு கொபி, டீ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹைதராபாத்தில் ஈரானி டீ, சைனீஸ் டீ என விதவிதமான டீ விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நீலோஃபர் டீக் கடை மிகவும்பிரபலாமானது. பல கிளைகள் கொண்ட இந்தக் கடையில் விதவிதமான டீ, பிஸ்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவர்கள் சமீபத்தில், பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் தங்கள் கிளையை திறந்தனர். இங்கு ஒரு கொபி, டீ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் அப்படி என்னதான் இருக்கிறது என ருசித்துப் பார்ப்பதற்காகவே சிலர் ரூ.1,000 கொடுத்து அங்கு டீ குடித்து விட்டுச் செல்கின்றனர்.

இதுகுறித்து ஹோட்டலின் உரிமையாளர் கூறும்போது, அசாமில் 'கோல்டன் டிப்ஸ் பிளாக் டீ' எனும் டீ தூள் ஏலம் விடப்பட்டது.

இதனைஒருகிலோ ரூ.75 ஆயிரத்துக்கு நாங்கள் ஏலத்தில் எடுத்தோம். மிகவும் அரிதான, உயர்வகை டீ தூள் இது. இதனால் இந்த தூள் கொண்ட ஒரு கொபி டீயை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதனை ருசித்தவர்கள் மிகவும் நன்றாக இருப்பதாக கூறுகின்றனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .