மேடம்
பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை காட்டுவது அவசியம். உடல்நிலை மேம்பாட்டிற்கான பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
அஸ்வினி : கவனம்
பரணி : பயிற்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: கவனம்
இடபம்
வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உஷ்ணம் சம்மந்தமான பிரச்சினைகளில் அவதிப்படுவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: கவனம்
ரோகிணி : தாமதம்
மிருகசீரிடம் 1, 2: செலவு
மிதுனம்
தேவைகள் நிறைவேறும் விதத்தில் பணவரவுகள் இருக்கும். குல தெய்வ வழிபாடுகளில் ஈடுபடும் வாய்ப்புக்கள் உண்டாகும். தலைமைப் பொறுப்பிற்கான வாய்ப்புகள் கூடி வரும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: தரிசனம்
புனர்பூசம்: மகிழ்ச்சி
கடகம்
விழிப்புணர்வுடன் இருப்பதால் சில இழப்புக்களைத் தவிர்கலாம். ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். ஆரோக்கிய விஷயத்தில் கவனம் தேவை.
புனர்பூசம்: கவனம்
பூசம்: ஆலோசனை
ஆயில்யம்: கவனம்
சிம்மம்
செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. அதிக அலைச்சலால் உடல் நிலையில் சோர்வு உண்டாகும்.
மகம்:செலவு
பூரம்: கவனம்
உத்திரம் 1ஆம் பாதம்: சோர்வு
கன்னி
ஒரு சில வேலைகளில் இழுபறியான நிலை காணப்படும். தொழிலில் சக நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
உத்திரம் 2, 3, 4: கவலை
அஸ்தம்: நன்மை
சித்திரை 1, 2ஆம் பாதம்: சிந்தனை
துலாம்
போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். இடமாற்ற முயற்சிகள் வெற்றியைத்தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : கவலை
சுவாதி : வாய்ப்பு
விசாகம் 1, 2, 3: நன்மை
விருட்சிகம்
துக்கமான நிகழ்ச்சிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் காணப்படும்.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: கவனம்
கேட்டை: செலவு
தனுசு
மனதில் குழப்பம் மற்றும் மனக்கசப்புகள் உண்டாகும். சுப காரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் மசிழ்ச்சியான செய்திகள் உண்டாகும்.
மூலம்: துன்பம்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம்
மகரம்
வெளியூர் பிரயாணங்கள் ஒரளவு சாதகமாக அமையும். வயிற்றில் வலிகள் தோன்றி மறையும். பணியிடத்தில் சில சங்கடமான சூழ்நிலைகள் உண்டாகலாம்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: செலவு
அவிட்டம் 1, 2: கவனம்
கும்பம்
அரசாங்க செய்திகள் மகிழ்ச்சியுடையதாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். பணத்தட்டுப்பாடுகள் இருக்காது.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: அமைதி
மீனம்
இடம் மாற்றம் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். குடும்பத்து பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலில் அதிக லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : ஆசி
ரேவதி : லாபம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.