2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (10.03.2014)

A.P.Mathan   / 2014 மார்ச் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (10.03.2014)

மேடம்
வீண் செலவுகள் ஏற்படும். பதவி மாற்றம் இடமாற்றம் உண்டாகும். பிறரிடம் சுமூகமாகப் பழகுவது நல்லது. பேச்சு, செயலில் நிதானம் அவசியம்.
அஸ்வினி : செலவு
பரணி : நிதானம்
கிருத்திகை 1ஆம் பாதம்: கவனம்


இடபம்
ஒரு எண்ணம் ஈடேறும். வெளியூரிலிருந்து விருந்தினர்கள் வருவதால் மனதில் மகிழ்ச்சி பெருகும். தொடங்கிய காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: கவனம்


மிதுனம்
தொடங்கிய காரியம் சிற்சில தடைகளால் தாமதமாகும். அலைச்சல், அசதி அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டி வரும்.
மிருகசீரிடம் 2, 3: துக்கம்
திருவாதிரை: அலைச்சல்
புனர்பூசம் : கவனம்


கடகம்
நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மதிப்பு, மரியாதை உயரும். பிள்ளைகளால் சிறு சங்கடம் ஏற்படும். பணவரவு கடினம் என்பதால் சிக்கனம் அவசியம்.
புனர்பூசம்: ஈடுபாடு
பூசம் : அலைச்சல்
ஆயில்யம்: கவனம்


சிம்மம்
அநாவசிய கவலைகள், குழப்பங்களால் நிம்மதி குறையும். புதிய முயற்சிகளை சில காலம் தள்ளிப்போடுவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம்.
மகம்: கவலை
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: செலவுகள்


கன்னி
நண்பர்களிடமிருந்து உரியநேரத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்ப்புக்கள் குறையும். பிரச்சினைகள் அடுத்தடுத்து வந்தாலும் அசாத்திய துணிச்சலால் சமாளிப்பீர்கள்.
உத்திரம் 2, 3, 4: உதவி
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்


துலாம்
வெற்றி வாய்ப்பு கூடி வரும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். விருந்து சுற்றுலா கேளிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : வெற்றி
சுவாதி : இன்பம்
விசாகம் 1, 2, 3: கவனம்


விருட்சிகம்
மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. மறதியால் அவதி ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
விசாகம் 4: குழப்பம்
அனுசம்: பிரச்சினைகள்
கேட்டை: அலைச்சல்


தனுசு
அலைச்சல் வீண் போகாது. பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உறவினர்களால் ஆதாயம் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் உண்டு.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: தனலாபம்


மகரம்
மனதில் நம்பிக்கை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொதுநலப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: ஆதரவு
அவிட்டம் 1, 2: இன்பம்


கும்பம்
பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஓய்ந்து மகிழ்ச்சி திரும்பும். தர்ம சிந்தனைகள் உண்டாகும். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்


மீனம்
சாதாரண காரியத்திற்கே கடுமையாக உழைக்க வேண்டி வரும். மனதில் சிறு சலனங்கள் தோன்றியபடி இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி 4: நலம்
உத்திரட்டாதி : தோல்வி
ரேவதி : செலவு

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .