மேடம்
உடல் நலனுக்காக பயிற்சிகளில் அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். விரிவாக்கப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மனதில் ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும்.
அஸ்வினி : துன்பம்
பரணி : ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நலம்
இடபம்
மற்றவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் நிலையில் சிறிது பாதிப்புக்கள் காணப்படும். பணவரவுகள் நன்றாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகள் உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: செலவு
ரோகிணி : வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: துன்பம்
மிதுனம்
புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: லாபம்
கடகம்
வீணான விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சில குழப்பங்கள் வந்து வந்து நீங்கும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபடுவார்கள்.
புனர்பூசம்: குழப்பம்
பூசம்: முயற்சி
ஆயில்யம்: துன்பம்
சிம்மம்
குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். எச்செயலிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சுப காரியங்களுக்கு உண்டான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம்
கன்னி
பணியாளர்களுக்கு பணி சுமைகள் அதிகரிக்கும். உடலில் காயங்கள் உண்டாகும் அபாயங்கள் காணப்படுகின்றன. பயணங்களினால் சிறிது உடல் சோர்வுகள் காணப்படும்.
உத்திரம் 2, 3, 4: பிரச்சினை
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயணம்
துலாம்
அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி : இன்பம்
விசாகம் 1, 2, 3: வெற்றி
விருட்சிகம்
காரியத்தில் தடைகள் காணப்படும். வியாபாரத்தில் திடீர் பிரச்சினைகள் உண்டாகும். உடல் நிலையில் சிறிது பாதிப்புகள் காணப்படும்.
விசாகம் 4: அலைச்சல்
அனுசம்: தடை
கேட்டை: கஷ்டம்
தனுசு
வயது மூத்தவர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பெண்களுக்கு திடீர் நட்புக்கள் உண்டாகும். எதிர்பாராத விதங்களில் வருமானங்கள் கூடும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்
மகரம்
பணி சுமையில் இருந்து விடுபட்டு விடுதலை காண்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்ச்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
கும்பம்
புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் வாழ்வில் உயர்வு காண்பீர்கள். பணவரவுகள் நன்றாகவே இருக்கும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
மீனம்
நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வெளிநாட்டுப் பொருட்கள் பரிசாக கிடைக்கப்பெறுவீர்கள். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.