மேடம்
எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பணவரவு கூடும். பேச்சில் நிதானம் தேவை.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : உயர்வு
கிருத்திகை 1ஆம் பாதம்: கவனம்
இடபம்
பிள்ளைகள் நலனுக்காக செலவு செய்வீர்கள். வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் உண்டு. உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: செலவு
ரோகிணி : உதவி
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி
மிதுனம்
திடீர் பயணத்தால் அலைச்சல். நண்பர்கள் உறவினர்களால் சிறு சங்கடம். எந்த காரியத்திலும் கவனம் பொறுமை அவசியம்.
மிருகசீரிடம் 2, 3: பயணம்
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: பொறுமை
கடகம்.
வெற்றிகள் குவியும். எதிர்ப்புகள் விலகும். அரசு வங்கி இனங்களால் ஆதாயம் உண்டு.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : உயர்வு
ஆயில்யம்: நலம்
சிம்மம்
பணவரவு கூடும். துணிச்சலாலும் அசாத்திய காரியத்தினாலும் எதிரிகள் விலகி நிற்பார்கள். போட்டி மற்றும் பந்தயங்களில் வெற்றி உண்டாகும்.
மகம்: வரவு
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ம் பாதம்: வெற்றி
கன்னி
நிதானமாக யோசித்து செயல்படுவது அவசியம். உடல் நலத்தில் கவனம் தேவைப்படும். யாருடனும் வீண் வம்பு வேண்டாம்.
உத்திரம் 2, 3, 4: கவனம்
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பொறுமை
துலாம்
பயணத்தை தள்ளிப்போடுவது நலம். குழப்பங்களால் மனதில் நிம்மதி குறையும். வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : தாமதம்
சுவாதி : குழப்பம்
விசாகம் 1, 2, 3: இழப்பு
விருட்சிகம்
உடன் பிறந்தவர்கள் உதவிபுரிவார்கள். வீடு வாகனம் என புதிய பொருட்கள் சேரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
விசாகம் 4: உதவி
அனுசம்: லாபம்
கேட்டை: இன்பம்
தனுசு
பொது நலக்காரியங்களில் ஆர்வம் அதிகம் காணப்படும். தொடங்கிய காரியம் வெற்றிகரமாக முடியும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.
மூலம்: இன்பம்
பூராடம்: வெற்றி
உத்திராடம் 1ம் பாதம்: மகிழ்ச்சி
மகரம்
சொத்து விஷயத்தில் இருந்த பிரச்சனை விலகும். தொலை தூரப் பயணத்தின் போது பாதுகாப்பு தேவை. பெற்றோர் நலனில் அக்கறை தேவை.
உத்திராடம் 2, 3, 4: நலம்
திருவோணம்: கவனம்
அவிட்டம் 1, 2: அக்கறை
கும்பம்
எந்த காரியத்திலும் பதற்றம் கூடாது. வீண் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். வெளியாட்களை நம்ப வேண்டாம்.
அவிட்டம் 3, 4: பதற்றம்
சதயம் : துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: கவனம்
மீனம்
நண்பர்கள் உறவினர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் நம்பிக்கை துணிச்சல் கூடும்.
பூரட்டாதி 4: உதவி
உத்திரட்டாதி : வெற்றி
ரேவதி : நன்மை
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.