மேடம்
புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பணி நியமன ஆணைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அஸ்வினி : செலவு
பரணி : பாதிப்புகள்
கிருத்திகை 1ஆம் பாதம்: வெறுப்பு
இடபம்
பூர்வீக சொத்து பிரச்சினையில் மூக்கை நுழைக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். யோகா, தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி : கஷ்டம்
மிருகசீரிடம் 1, 2: பகை
மிதுனம்
முன் கோபத்தைக் குறையுங்கள். மின்சாரம், நெருப்பு இவற்றை கவனமாக கையாளுங்கள். திடீர் நண்பர்களை நம்பி புதிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மிருகசீரிடம் 2, 3: பயம்
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: துக்கம்
கடகம்
வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உடல் நிலையில் அக்கறை செலுத்துங்கள். பண விடயத்தில் ஏமாற்றங்கள் உண்டாகும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : சாதனை
ஆயில்யம்: இன்பம்
சிம்மம்
பொருட்களை வாங்குவது, விற்பதில் கவனமாக செயல்பட வேண்டி வரும். கிடைத்த வேலைகளை செய்வது நல்லது. படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
மகம்: நஷ்டம்
பூரம்: சிக்கல்கள்
உத்திரம் 1ஆம் பாதம்: துன்பம்
கன்னி
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வழக்கில் சாதகமான முடிவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
உத்திரம் 2, 3, 4: ஆர்வம்
அஸ்தம்: தகவல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவனம்
துலாம்
பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : துன்பம்
சுவாதி : கஷ்டம்
விசாகம் 1, 2, 3: பிரச்சினை
விருட்சிகம்
திடீர் பயணங்கள் உண்டாகும். சிக்கனமாக இருக்க வேண்டும் என நினைத்தாலும் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவாக நடப்பது நலம்.
விசாகம் 4: பயணம்
அனுசம்: செலவு
கேட்டை: அக்கறை
தனுசு
புது பதவிகளும் பொறுப்புக்களும் கூடி வரும். அயல் நாட்டு வாய்ப்புகள் வீடு தேடி வரும். பயணங்களால் ஏற்பட்ட அலைக்கழிப்புக்கள் அலைச்சல்கள் ஆகியவை குறையும்.
மூலம்: பயம்
பூராடம்: துன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அலைச்சல்
மகரம்
சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடியும். குடும்பத்தில் வாக்கு வாதங்கள் வந்து போகும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.
உத்திராடம் 2, 3, 4: துன்பம்
திருவோணம் : பயம்
அவிட்டம் 1, 2: சங்கடம்
கும்பம்
யாரையும் நம்பி உறுதி மொழி தர வேண்டாம். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுவீர்கள். உயர் கல்வி சம்மந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.
அவிட்டம் 3, 4: அலைச்சல்
சதயம் : கஷ்டம்
பூரட்டாதி 1, 2, 3: துன்பம்
மீனம்
அடுக்கடுக்காக செலவுகள் வந்து கொண்டே இருக்கும். மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் அதிகரிக்கும். உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பூரட்டாதி 4: துன்பம்
உத்திரட்டாதி: சிக்கல்
ரேவதி: உதவி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.