2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (27.10.2013)

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (27.10.2013)
 
மேடம்
உங்களின் செயல், திறமை நற்பெயர் பெற்று தரும். நண்பர்கள் கேட்ட உதவியை வழங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
 
 
இடபம்
நிறைவேற்ற வேண்டிய பணிகளில் ஒன்றினை மறக்க நேரிடலாம். பணவரவில் தாமதம் இருக்கும். பிராணிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
கிருத்திகை 2, 3, 4: செலவு
ரோகிணி : வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: துன்பம்
 
 
மிதுனம்
கருணை நிறைந்த உங்களின் செயல்களை சிலர் குறை கூறுவர். இலகுவான மனதுடன் பணி புரிவது அவசியம். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும்.
மிருகசீரிடம் 2, 3: மனக்கஷ்டம்
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: துக்கம்
 
 
கடகம்
உங்களின் கடந்த கால உழைப்பிற்கு நற்பலன் தேடி வரும். தொழில் மற்றும் வளர்ச்சி பணிகளில் பரிமாணம் ஏற்படும். ஆதாய பண வரவு கிடைக்கும்.
புனர்பூசம்: நன்மை
பூசம்: வளர்ச்சி
ஆயில்யம்: இன்பம்
 
 
சிம்மம்
சான்றோர்களின் அறிமுகம் கிடைத்து சில நன்மை பெறுவீர்கள். தொழில் சார்ந்த இடையூறு விலகும். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு உண்டாகும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: தரிசனம்
 
 
கன்னி
அவசரமாக சில பணிகள் உருவாகலாம். தொழிலில் உள்ள அனுகூல சூழ்நிலையை பாதுகாப்பது நல்லது. பண வரவை விட குடும்ப செலவு அதிகரிக்கும்.
உத்திரம் 2, 3, 4: பிரச்சினை
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவனம்
 
 
துலாம்
சிலரது தவறான வழிகாட்டுதலினால் போட்டி, பந்தயங்களில் ஈடுபடக்கூடாது. திட்டமிட்ட காரியங்கள் நடைபெற கால தாமதங்கள் உண்டாகும். போக்குவரத்தில் கவனம் அவசியம்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : கவனம்
சுவாதி : தாமதம்
விசாகம் 1, 2, 3 : துன்பம்
 
 
விருட்சிகம்
வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு தாய் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சீரான அளவில் வளர்ச்சி பெறும்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: உதவி
கேட்டை: வளர்ச்சி
 
 
தனுசு
இன்று மனதில் இனம்புரியாத சஞ்சலம் ஏற்படும். நண்பர்களின் கவனக்குறைவான செயலை குறை சொல்லி பேசவேண்டாம். அளவான பணவரவு கிடைக்கும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: பயம்
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்
 
 
மகரம்
இன்று உற்சாக மனதுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். ஆன்மீக சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
 
 
கும்பம்
முக்கிய பணிகள் நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். விற்பனைகளை அதிகரிக்க மாற்று உபாதைகளை பின்பற்றுவது அவசியமாகும். அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பயன்படுத்தவும்.
அவிட்டம் 3, 4: அவகாசம்
சதயம் : உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
 
 
மீனம்
நியாய தர்ம குணத்துடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நன்மை உண்டாகும். அதிகம் பயன்படாத பொருட்களை வாங்காதீர்கள்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .