2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (29.10.2013)

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (29.10.2013)
 
மேடம்
அல்லல்கள் நீங்கி ஆனந்தம் காணும் நாள். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே முடியும். புதிய முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி : இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நன்மை
 
 
இடபம்
மற்றவர்களின் விமர்சனங்களால் மனக்குழப்பம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். முன்னேற்றம் காண கடவுள் வழிபாடு அவசியம்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : குழப்பம்
மிருகசீரிடம் 1, 2: வழிபாடு
 
 
மிதுனம்
நினைத்தது நிறைவேறும் நாள். உறவினர்களும் நண்பர்களும் உதவி செய்ய முன்வருவார்கள். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும்.
மிருகசீரிடம் 2, 3: உதவி
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: இன்பம்
 
 
கடகம்
எடுத்த காரியத்தை முடிக்க உடனிருப்பவர்கள் ஆதரவு கிடைக்கும். நிழல் போல் தொடர்ந்த கடன் சுமை குறையும். எதிரிகள் காணாமல் போவார்கள்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : நன்மை
ஆயில்யம்: இன்பம்
 
 
சிம்மம்
பக்குவமாக பேசி பாராட்டை பெற வேண்டிய நாள். பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும். இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறலாம்.
மகம்: நன்மை
பூரம்: அக்கறை
உத்திரம் 1ஆம் பாதம்: வெற்றி
 
 
கன்னி
பொருளாதார நிலையை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். தாய்வழி ஆதரவு பெருகும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: ஆதரவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
துலாம்
விடா முயற்ச்சிக்கு வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். பெண்களால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : வெற்றி
சுவாதி: முன்னேற்றம்
விசாகம் 1, 2, 3: இன்பம்
 
 
விருட்சிகம்
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பாராட்டு, கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும். பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள்.
விசாகம் 4: நன்மை
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: இன்பம்
 
 
தனுசு
சிந்தித்து செயல்பட்டு சிறப்புக்களைப் பெறும் நாள். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக பயணம் ஏற்படலாம்.
மூலம்: இன்பம்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: அலைச்சல்
 
 
மகரம்
மாற்றங்களால் ஏற்றம் பெறும் நாள். சிக்கனமாக இருந்தாலும் செலவுகள் ஏற்படலாம். பாதியிலேயே விட்ட காரியங்களை செய்ய நேரிடும்.
உத்திராடம் 2, 3, 4: ஆர்வம்
திருவோணம்: செலவு
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
 
 
கும்பம்
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும். விரும்பிய காரியத்தை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம் : மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: உயர்வு
 
 
மீனம்
எதிர்கால திட்டம் தீட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். பொது காரியங்களில் நாட்டம் செல்லும்
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : தூக்கம்
ரேவதி : இன்பம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .