2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

1.60 லட்சம் போட்டியாளர்கள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம்; எதற்காகத் தெரியுமா?

Ilango Bharathy   / 2022 மே 10 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘தண்டுவடவாத சிகிச்சை‘ தொடர்பான ஆய்வுக்கு நிதி திரட்டுவதற்காக 165 நாடுகளில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் ஒரு லட்சத்து 60,000 பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

‘Wings for Life ‘என்ற தொண்டு நிறுவனம், 9 ஆண்டுகளாக மே மாத முதல் ஞாயிற்றுகிழமை, இந்த ஓட்டப்பந்தயத்தை நடத்தி வருகிறது.

அந்தவகையில் நேற்று முன்தினம்(08)  நடைபெற்ற இப்போட்டியில் ”56 கிலோமீற்றர் ஓடிய ரஷ்ய பெண்மணி நினா ஜரினா பெண்கள் பிரிவிலும், 64.5 கிலோமீற்றர் ஓடிய ஜப்பானின் ஜோ ஃபுகுடா ஆடவர் பிரிவிலும் முதலிடத்தை பிடித்தனர்.



அதிகப்பட்சமாக இந்தியாவின் ஜெய்ப்பூரில் 42  பாகை செல்சியசிலும் வெயிலிலும், குறைந்தபட்சமாக கிரீன்லாந்தில் - 8 பாகை செல்சியஸ் குளிரிலும் இப் போட்டி நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X