2025 மே 17, சனிக்கிழமை

16 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Ilango Bharathy   / 2023 மார்ச் 08 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 வாடகை கொடுப்பதில் சலிப்படைந்த நபர் ஒருவர் கடந்த 16 ஆண்டுகளாக குகையில் வசித்து வந்த   சம்பவம்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘டேனியல் ஷெல்லாபார்ஜர் ‘ என்ற நபரே இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறி  குகையொன்றில் வாழ்ந்து வந்துள்ளார்.

 மாடர்ன் கேவ்மேன் (நவீன குகைமனிதன்) என்றழைக்கப்படும் இவர் வீட்டு வாடகை செலுத்துவதில் நெருக்கடியைச் சந்தித்தாலும், பணியிடத்தில் ஏற்பட்ட அதிகப்படியான மனவுளைச்சலாலும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.

எனினும் பின்னர் அம்முடிவை மாற்றிக் கொண்டு நாடோடியாக வாழத் தொடங்கினார்.  அந்தவகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு வீட்டை வீட்டு வெளியேறிய அவர் ‘உடா‘  என்ற பகுதியில் உள்ள குகையொன்றில்  வசிக்கத்தொடங்கியுள்ளார்.

மேலும்  குப்பைத்தொட்டிகளில் வீசப்பட்ட உணவுகளையும், தனது குகைக்கு அருகே அவரே விளைவித்த காய்கறிகள் பழங்களை உண்டு உயிர்வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் 16 ஆண்டுகள் மனிதத் தொடர்புகள் இல்லாமல் வாழ்ந்த டேனியல் தனது பெற்றோருக்கு வயதானதால் அவர்களை கவனித்துக்கொள்ள மீண்டும் மனிதர்கள் வாழும் பகுதிக்கு திரும்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .