2025 மே 20, செவ்வாய்க்கிழமை

2,000 க்கும் மேற்பட்ட சிறுவர்களைக் கடத்திய ரஷ்யா?

Ilango Bharathy   / 2022 மார்ச் 23 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}



உக்ரேனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய இராணுவம், பொது மக்களை பணையக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாக  உக்ரேன் குற்றம்சாட்டி வந்த நிலையில் தற்போது 2000 க்கும் மேற்பட்ட சிறுவர்களை ரஷ்யா கடத்திச் சென்றுள்ளதாக உக்ரேன் அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான செய்திக்  குறிப்பில் ” ரஷ்யாவின் படையெடுப்பில் சிறுவர்கள் குறி வைக்கப்பட்டுக்  கடத்தப்படுகின்றனர்.

குறிப்பாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பகுதியில் இருந்து இதுவரை  2,389 சிறுவர்கள் ரஷ்யாவுக்கு சட்ட விரோதமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்”  எனத் தெரிவித்துள்ளது.



இந்நிலையில்  இச்செய்தியானது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X