2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

2 ஆண்டுகளுக்குப் பின்னர் பாடசாலைகளைத் திறந்த பிரபல நாடு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 11 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு ஆபிரிக்க நாடான உகாண்டாவில் கொரோனாத் தொற்றுப்  பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

அதை தொடர்ந்து அங்கு மாணவர்களுக்கு ஒன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தும் பணிகள் தொடங்கின. எனினும்அந் நாட்டில் உள்ள பெரும்பாலான அரச பாடசாலைகளில் ஒன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் சுரங்களில் வேலைக்கு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,


இவ் விவகாரத்தில் அந்நாட்டு ஜனாதிபதி யோவேரி முசெவேனி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோதும் பாடசாலைகளைத் திறக்க அவர் உத்தரவிடவில்லை.

இந் நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் உகாண்டாவில் நேற்றைய தினம் பாடசாலைகள்  மீண்டும் திறக்கப்பட்டன.

இதன் காரணமாக தலைநகர் கம்பாலா உள்ளிட்ட பல நகரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .