2025 மே 20, செவ்வாய்க்கிழமை

2025 வரை பதவியில் தொடருவதற்கான ஒப்பந்தத்தை எட்டிய ட்ரூடோ

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 23 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது சிறுபான்மையின அரசாங்கத்தை 2025ஆம் ஆண்டு வரையில் தொடருவதற்கான ஒப்பந்தமொன்றை இடதுசாரிக் கொள்கைகளை நோக்கிப் பயணிக்கும் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியுடன் கனடாவின் ஆளும் லிபரல்கள் எட்டியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இதேவேளை, குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு பற் பாதுகாப்புத் திட்டமொன்று உள்ளடங்கலான பல்வேறுபட்ட பிரச்சினைகளை முன்னகர்த்துவதாக பிரதமர் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தின்படி 338 ஆசனங்களையுடைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 170 ஆசனங்கள் தேவைப்படுகின்ற நிலையில், லிபரல் கட்சி அரசாங்கத்துக்கு 184 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X