2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

22,000 பேருக்குப் பொதுமன்னிப்பு

Ilango Bharathy   / 2023 மார்ச் 15 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 22,000 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

`ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  ஹிஜாப்பினை முறையாக  அணியவில்லை` எனக்  கூறி கைது செய்யப்பட்ட ‘மஹ்சா அமினி‘ என்ற இளம்பெண் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.

இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஈரான் அரசுக்கு  எதிராக ஆயிரக்கணக்கானோர்  தொடர்  போராட்டங்களில்  ஈடுபட்டனர்.

 இதனையடுத்து போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் ஈரான் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் அந்நாட்டு நீதித்துறை தலைவர்  விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த வாரம் ரம்ஜான் நோன்பு தொடங்க உள்ள நிலையில் 22,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஈரான் மதத் தலைவர் கொமேனி உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X