Janu / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமேசான் நிறுவனம் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது.
ஒட்டுமொத்த நிறுவனச் செலவுகளை குறைக்கவும், கொரோனா காலத்தில் அதிகப்படியான ஆன்லைன் தேவை காரணமாக கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்கவும் இம்முடிவு எடுக்கப்படுவதாக அமேசான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கு பிறகு அமேசான் நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய பணிநீக்கம் இதுவாகும்.
கொரோனா தொற்றுநோய் காலத்தில் அமேசானில் அதிகமானோர் வேலைக்கு எடுக்கப்பட்டனர். 2019 ஆம் ஆண்டில் அமேசானில் 7,98,000 பேர் வேலை பார்த்தனர். அது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 16 லட்சமாக உயர்ந்தது. அதன்பின்பு பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

29 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago