Ilango Bharathy / 2022 ஏப்ரல் 28 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உணவகமொன்று 30 ஆண்டுகளாக கழிவறையில் சமோசா தயாரித்து வந்த சம்பவம் சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில், ஜெட்டா நகரில் உள்ள உணவகமொன்றே இச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வுணவகம் குறித்து பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இவ் உண்மை வெளியுலகிற்கு அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இவ்வுணவகத்தில் ‘சமோசா‘ உள்ளிட்ட பல உணவுப் பண்டங்கள் மற்றும் மதிய உணவுகள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் , இது தவிர காலாவதியான இறைச்சி மற்றும் பாலாடை கட்டிகளையும் அவ் உணவகம் சமையலுக்குப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .