Freelancer / 2025 மே 28 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யா, செவ்வாய்க்கிழமை (27), தொடர் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி இருப்பதுடன், எல்லையோர உக்ரைன் கிராமங்களை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் ஆரம்பித்த காலத்தில், உக்ரைன் படைகள், ரஷியாவின் குர்ஸ்க் பகுதியை கைப்பற்றியதாக அறிவித்தன.
குர்ஸ்க் பகுதியின் எல்லையான சுமி என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த இடையக மண்டலத்தை உருவாக்க ரஷ்யா முயன்று வருகிறது. இதன் எதிரொலியாக ரஷ்யா, உக்ரைன் எல்லையில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அடுக்கடுக்கான குண்டுவீச்சு மற்றும் டிரோன் தாக்குதலால் உக்ரைனின் எல்லையோர 4 கிராமங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும் அந்த கிராமங்களில் மக்கள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்றும், உக்ரைனுக்குள் முன்னேற ரஷ்யா முயற்சிப்பதாகவும் உக்ரைன் இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
7 minute ago
12 minute ago
19 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
19 minute ago
34 minute ago