Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
63 வயதான நபர் ஒருவர் 53 பெண்களைத் திருமணம் செய்துள்ள விநோத சம்பவம் சவுதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது.
சவுதி அரேபியாவை சேர்ந்தவர் அபு அப்துல்லா. 63 வயதான இவர் தனது 20 ஆவது வயதில் தன்னை விட ஆறு வயது மூத்த பெண்ணை முதலாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த சமயத்தில் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே அவருக்கு இருந்தது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் , சில மாதங்கள் கழித்துமே முதல் மனைவியுடன் அபு அப்துல்லாவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், இரண்டாவது திருமணம் செய்யும் எண்ணம் அபுவுக்கு வரவே அதனை தனது மனைவியிடமும் அவர் கூறி உள்ளார். இரண்டாவது திருமணமும் அப்துல்லா செய்து கொள்ள, முதல் மற்றும் இரண்டாவது மனைவிக்கு இடையே தகராறு உருவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இப்படியே மூன்று, நான்கு என அடுத்தடுத்து பெண்களை திருமணம் செய்து கொண்டும் விவாகரத்து செய்து கொண்டும் அபு அப்துல்லா வந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய மன ரீதியான நிம்மதிக்காகவே இவை நடந்ததாகவும் அபு குறிப்பிடுகிறார்.
மேலும் அவர் செய்த திருமணங்களிலேயே குறைந்த காலம் நீடித்தது என்றால், ஒரு நாளுடன் ஒரு திருமண வாழ்க்கை நின்று போனது என்பது தான். இதற்கு மத்தியில், தொழில் விடயமாக வெளிநாடு சென்றிருந்த அபு அப்துல்லா, ஒரு வெளிநாட்டு பெண்ணையே காதலித்து அங்கேயே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இத்தனை மனைவிகளுக்கு பின், தற்போது ஒரே ஒரு மனைவியுடன் வாழ்ந்து வரும் அபு அப்துல்லா, இனிமேல் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை என கூறி விட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago