2025 மே 16, வெள்ளிக்கிழமை

54 நாட்களின் பின் தாயுடன் இணைந்த சேய்

Freelancer   / 2023 ஏப்ரல் 04 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அயா என்ற குழந்தை இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்குண்டு தவித்து வந்தார். அனர்த்தத்தில் அயாவின் தாய் இறந்து விட்டதாகவும் நம்பப்பட்டது.  128 மணித்தியாலங்களுக்கு பின்னர் மீட்புப் பணியாளர்களால் பெரும் போராட்டத்தின் மத்தியில் அயா மீட்கப்பட்டார்.

இருப்பினும், அயாவின் தாய் வேறொரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், இன்னும் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் தெரிய வந்துள்ளது.

54 நாட்களுக்கு பின் குழந்தையும், இறந்து விட்டதாக நம்பப்பட்ட தாயும் ஒன்று சேர்ந்து இருக்கும் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அயா மற்றும் அவளது தாய்க்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .