Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் எவான்ஸ்வில் பகுதியில் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் எனும் தம்பதியினர். வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பிறந்து 6 மாதங்களேயான ஆண் சிசுவும் உள்ளது. மற்றோர் உறவுக்கார பெண்ணும் வேறொரு தம்பதியினரும் அவர்களின் குழந்தையுடன் வசித்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு, தனது 6 மாத ஆண் சிசுவின் உடலெங்கும் காயங்கள் இருப்பதாக அவசரசேவைக்கு டேவிட் தகவலளித்தார். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு பொலிஸார் விரைந்து வந்த பார்த்த போது அந்த சிசுவின் தலை மற்றும் முகத்தில் 50 இடங்களில் காயங்களுடன் உடல் முழுவதும் ரத்த களரியாக காணப்பட்டது. வலது கரத்தில் அனைத்து விரல்களின் தலைபாகங்களிலும் சதை முழுவதுமாக காணாமல் போயிருந்தது. ஒரு சில விரல்களில் உள்ளேயிருக்கும் எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு காயங்கள் இருந்தது.
அச்சிசுவை உடனடியாக நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரத்தம் செலுத்தப்பட்டது. அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் விளைவாக சிசு உயிர் பிழைத்து கொண்டது. அந்த சிசுவை ஒன்றுக்கும் மேற்பட்ட எலிகள் கடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
குழந்தையை வளர்ப்பதில் பொறுப்பற்ற முறையில் இருந்ததற்காகவும் பராமரிக்கும் கடமையில் தவறியதற்காகவும் அத்தம்பதியினரையும் அவர்களின் உறவுக்கார பெண்மணியையும் பொலிஸார் கைது செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
39 minute ago
50 minute ago
53 minute ago