Ilango Bharathy / 2021 டிசெம்பர் 26 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவில் கடந்த 2019ஆம் ஆண்டு சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யபட்ட பாதிரியாருக்கு தற்போது நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தென் மேற்கு ரஷ்யாவில் அமைந்துள்ள யுரல் மலைத்தொடர் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயமொன்று உள்ளது.
இத்தேவாலயத்தில் பணிபுரந்த நிக்கோலாய் என்னும் பாதிரியார் 70 சிறுவர்களைத் தத்தெடுத்து வளர்த்து வந்தாகவும் இதனால் அவருக்கு தேசிய அளவிலான விருது ஒன்றும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் அச் சிறுவர்களைபாலியல் வன்கொடுமை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவருக்கு கொடுக்கப்பட்ட விருதையும் திரும்பப் பெறுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .