Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தவித்த ஐந்து பேர் 8 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 40,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தெற்கு நகரமான ஹடேயில் நிலநடுக்கம் ஏற்பட்டு 204 மணி நேரத்திற்கு பிறகு இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணும், ஆணும் மீட்கப்பட்டதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, 198 மணி நேரத்திற்கு பிறகு, தென் துருக்கியில் இடிபாடு குவியலுக்குள் சிக்கியிருந்த 18 வயது இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே, கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் இருந்து இரண்டு சகோதரர்களை மீட்புப் பணியாளர்கள் உயிருடன் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago