2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

80 பேருக்கு குரங்கு அம்மை தொற்றுப் பாதிப்பு: அச்சத்தில் மக்கள்

Ilango Bharathy   / 2022 மே 22 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வரும் குரங்கு அம்மை நோய்த் தொற்று சின்னம்மை போல இருப்பினும்  பாதிப்பு குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய நோயாக இது கருதப்படுகிறது. ஆரம்பத்தில் ஆபிரிக்காவில் மாத்திரமே  இந்நோய் பரவி வந்த நிலையில்  தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் அதிகளவில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில் இது குறித்து அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய உலக சுகாதார ஸ்தாபனம் ”அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட  12 நாடுகளில் 80 பேருக்கு இத்தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக” அறிவித்துள்ளது.


எனினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தொற்று வேகமாகப் பரவலாம் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம்  எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X