Freelancer / 2025 மார்ச் 25 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த கோல்ட் கார்ட் விசா திட்டத்தின் கீழ் ஒரேநாளில் ஆயிரம் கோல்ட் கார்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோல்ட் கார்ட் வாங்குவதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
இதன் மூலம் கிரீன் கார்ட் வைத்திருப்பது போன்று கோல்ட் கார்டும் பயனுள்ளதாக இருக்கும். இது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கு சமம். இத்திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இந்த திட்டம் 2 வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இதற்கான மென்பொருளை எலான் மஸ்க் உருவாக்கி வருகிறார்.
5 மில்லியன் டொலர்களை செலுத்துவதன் மூலம் அமெரிக்காவில் காலவரையின்றி, அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் இருக்க உரிமை உண்டு. அவர்களது பின்புலம் சரிபார்க்கப்படுகிறது.
அவர்கள் தீயவர்களாகவோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவோ இருந்தால் அமெரிக்கா எப்போதும் அதை இரத்து செய்யலாம்.
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025