2025 மே 17, சனிக்கிழமை

LGBTQ+ சமூகத்தினருக்கு 10 ஆண்கள் சிறை

Ilango Bharathy   / 2023 மார்ச் 27 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

‘ LGBTQ+‘  சமூகத்திற்கு எதிராகக்  கடுமையான சட்டம் ஒன்றை உகாண்டா அரசு நிறைவேற்றியுள்ளது.

 உகாண்டா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஆபிரிக்க நாடுகளில் ‘LGBTQ+‘ , சட்ட விரோதமாகப்  பார்க்கப்படுகின்றது.  

அதேசமயம் அண்மைக்காலமாக ”‘LGBTQ+‘  சமூகத்தில் இணைவது  குற்றமாக அறிவித்து கடுமையான தண்டனையை விதிக்க வேண்டும் என அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தி வந்தனர்.

மேலும் இது இயற்கைக்கு முரணானது எனவும், ஆபிரிக்காவின் பாரம்பரிய மத நம்பிக்கைகளுக்கு எதிரானவை எனவும் தங்கள் சமூகத்திற்கு தீங்கானவை எனவும் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து உகாண்டா பாராளுமன்றத்தில் ‘LGBTQ+‘சமூகத்திற்கு எதிரான மசோதாவை அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர் அசுமான் பசலிர்லா அறிமுகம் செய்தார்.

அதைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களின் முழு ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இப் புதிய சட்டத்தின் படி யாரேனும் தன்னை ‘LGBTQ+‘  சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்திக் கொண்டால் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும், இது  தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘LGBTQ+‘ க்கு எதிராக  வழங்கப்படும் உலகிலேயே மிகக்  கடுமையான சட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படும் நிலையில், இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .