Editorial / 2019 ஜனவரி 07 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கேரளாவில் அமைந்துள்ள அகத்தியர்கூட மலைக்குப் பெண்கள் செல்வதற்கு, கேரள உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதனால், இங்கு மலையேறுவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான முற்பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கேரள - தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள அகத்தியர்கூட மலை, ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. அகத்திய முனிவர் இங்கு தங்கியிருந்தாரென, அங்குள்ள மக்கள் காணப்படுகின்றனர். 1,869 மீற்றர் உயரமான இம்மலையில், அகத்திய முனிவருக்கென தனிக் கோவில் இருந்தாலும், பெண்கள் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
பெண்கள் அங்கு செல்வதற்கு அம்மலையில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அனுமதி வழங்குவதற்கு, கேரள அரசாங்கம் மறுத்துவந்தது.
இந்நிலையில், இத்தடையை நீக்குமாறு கோரி, மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்தே, அனுமதி வழங்கி, உத்தரவு வழங்கப்பட்டது.
இதற்கான முற்பதிவு தொடங்கிய 2 மணிநேரத்திலேயே, அனுமதிக்கப்பட்ட அளவு முற்பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து, எதிர்வரும் 14ஆம் திகதி, ஆண்கள், பெண்கள் என அனைவரும், மலையேற்றத்துக்குச் செல்லவுள்ளனர். சுமார் 41 நாள்கள் வரை, இம்மலைக்குச் செல்ல, கேரள வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர்.
ஏற்கெனவே, கேரளாவில் அமைந்துள்ள சபரிமலைக்குச் செல்வதற்கு, பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, இந்திய உச்சநீதிமன்றம் நீக்கியிருந்தது. அதன் காரணமாகச் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தாலும், முக்கியமான மாற்றமாக அமைந்திருந்தது. இப்போது, அகத்தியர்கூட மலைக்குச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5 minute ago
8 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 hours ago
05 Nov 2025