2025 மே 14, புதன்கிழமை

அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 50க்கும் மேற்பட்டோர் பலி

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியட்நாம் தலைநார் ஹனோயில் உள்ள 10 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இன்று(12) தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் ஏற்பட்ட தீ கட்டிடம் முழுவதும் பரவியது. அதிகாலை நேரம் என்பதால் குடியிருப்பில் இருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியாமல் போயுள்ளதுது.

தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .