Freelancer / 2025 மார்ச் 17 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவின் லடாகியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் பழைய பொருட்களை சேமித்து வைக்கும் அறை உள்ளது.
அந்த அறையில் உள்நாட்டு போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, வெடிமருந்துகள் இருந்துள்ளது.
இந்த வெடிமருந்து, ஞாயிற்றுக்கிழமை (16) இரவு திடீரென வெடித்து சிதறியது. இதில், அடுக்குமாடி குடியிருப்பும் இடிந்தது. இதனால், அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் வசித்து வந்த பலர் வெடிவிபத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
6 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
57 minute ago
1 hours ago