2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

அணு ஒப்பந்த நிபந்தனைகளிலிருந்து ஈரான் விலகினால் மீண்டும் பொருளாதாரத் தடைகள்

Editorial   / 2019 மே 09 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது அணு ஒப்பந்தத்தின் கீழான நிபந்தனைகளில் இருந்து ஈரான் விலகினால், ஈரான் மீது சர்வதேச பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என பிரெஞ்சு ஜனாதிபதி தகவல் மூலங்கள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளன.

ஈரானுடனான அணு ஒப்பந்தத்திலிருந்து, ஐக்கிய அமெரிக்காவை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விலகிக் கொண்டுள்ளபோதும், இதை எதிர்க்கின்ற ஐக்கிய அமெரிக்காவின் ஐரோப்பிய நட்புறவு நாடுகள், குறித்த நடவடிக்கையால் ஏற்பட்ட பொருதாரத் தாக்கத்தை குறைக்க முயன்று தோற்றுள்ளபோதும், அணு ஒப்பந்தத்தின்படி ஒழுகுமாறு ஈரானை வலியுறுத்துகின்ற நிலையில், அணு ஒப்பந்தத்தின்படி ஈரான் ஒழுகுகின்றது.

இந்நிலையில், அணு ஒப்பந்தத்தின் கீழான தனது பொறுப்புகளைக் குறைக்கும் திட்டங்கள் தொடர்பாக அணு ஒப்பந்தத்தில் இன்னும் கைச்சாத்திட்டுள்ள நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீனாவுக்கு ஈரான் நேற்று கடிதமெழுதும் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அந்தவகையில், அணு ஒப்பந்தத்திலிருந்து விலக ஈரான் திட்டமிடவில்லை எனத் தெரிவித்த ஈரானிய அரச செய்தி அறிக்கைகள், ஆனால், அணு ஒப்பந்தத்தின் கீழ் இடைநிறுத்தப்பட்ட சில அணு நடவடிக்கைகளை மீளத் தொடங்கவுள்ளதாகக் கூறியிருந்தன.

இந்நிலையில், தற்போது ஈரான் என்ன நடவடிக்கைகளை குறிப்பாக திட்டமிடுகின்றது என ஐரோப்பிய நாடுகளுக்கு இன்னும் தெரியாது எனத் தெரிவித்த பிரெஞ்சு ஜனாதிபதி தகவல்மூலமொன்று, ஆனால், குறித்த நடவடிக்கைகள், அணு ஒப்பந்தத்திலிருந்து விலகும் வகையில் அமைந்தால், தாங்கள் மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிப்போம் எனக் கூறியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X