Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 26 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் அணுஆயுதக் களஞ்சியத்தை அதிகப்படுத்துவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் உறுதிமொழி அளித்தார்.
திங்கள்கிழமை இரவு இடம்பெற்ற அந்நாட்டு இராணுவ அணிவகுப்பில் இதை தெரிவித்தார்.
மேலும், ஆயுதப் படைகளின் நிறுவன ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பில் தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் (ICBMs) காட்சிப்படுத்தப்பட்டன.
வட கொரியா 2017 க்குப் பிறகு முதல் முறையாக, மார்ச் மாதம் அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது.
இது சர்வதேச சமூகத்தில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
சோதனைக்குப் பிறகு அந்நாட்டின் மீது அமெரிக்காவும் பல தடைகளை விதித்தது.
அணு ஆயுத விநியோகத்திற்காக வடிவமைக்கப்பட்ட ICBMகள், வட கொரியாவின் தாக்குதல் வரம்பை அமெரிக்க நிலப்பகுதி வரை நீட்டிக்கின்றன.
அணிவகுப்பில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தவிர நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இடம்பெற்றன.
இருப்பினும், திரு கிம் இதுவரை கண்டனத்திற்கு ஆளாகவில்லை.
எங்கள் தேசத்தின் அணுசக்தி திறன்களை மிக வேகமாக வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம், என்று அவர் கூறினார், அவர்களின் அணுசக்தி எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
வடகொரியாவை முறையான அணுசக்தி நாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கிம் ஜாங்-உன் விரும்புகிறார்.
தனது நாட்டின் மீதான தடைகளை நீக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.
அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களில் Hwasong-17 இருந்ததை அரசு ஊடகங்கள் வெளியிட்ட அணிவகுப்பு படங்கள் காட்டுகின்றன. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .