2025 மே 17, சனிக்கிழமை

அமெரிக்க - சீன வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 20 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி ஆகிய இருவரும் மாநாட்டின் இடையே நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, உளவு பலூன் பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். உளவு பலூன் பிரச்சினையை குறிப்பிட்டு பேசிய பிளிங்கன் இது அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் பொறுப்பற்ற செயல் என கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இந்த மாத ஆரம்பத்தில் மொன்டானா மாகாண வான்பரப்பில் ராட்சத பலூன் ஒன்று பறப்பதை அவதானித்த ராணுவம் அது, உளவு பார்ப்பதற்காக சீனாவால் அனுப்பப்பட்ட பலூன் என்று குற்றம்சாட்டியது.

ஆனால், குறித்த பலூன் சீனாவோ வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்டதாக சீனா தெரிவித்திருந்தது.

எனினும் அதை ஏற்க மறுத்த அமெரிக்கா, போர் விமானம் மூலம் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .