Editorial / 2019 மார்ச் 07 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

உயரதிகாரியொருவரால் தான் வன்புணரப்பட்டதாக, ஐக்கிய அமெரிக்காவின் செனட்டரான மார்தா மக்ஸல்லி, நேற்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அமெரிக்க வான் படையின் முதலாவது போர்க்கள விமானியான மார்தா மக்ஸல்லி, அமைப்பில் நம்பிக்கையில்லாததால் தான் வண்புணரப்பட்டதை முறையிடவில்லையென்று கூறியுள்ளார்.
குற்றமிழைத்தவர்கள், அவர்களது அதிகார நிலையை அளவிடற்கரிய முறைகளில், தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் எனத் தெரிவித்த அரிஸோனா மாநிலத்துக்கான செனட்டரான மார்தா மக்ஸல்லி, ஒருமுறை தான் வழிபட்டபோதும் பின்னர் உயரதிகாரியொருவரால் வன்புணரப்பட்டதாகவும், இராணுவத்தில் பாலியல் தாக்குதல் தொடர்பான செனட்டின் விசாரணையொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது தாக்குதலாளியை குடியரசுக் கட்சியின் மார்தா மக்ஸல்லி அடையாளப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில், பாலியதல் தாக்குதல், துன்புறுத்தலானது பெரும்பாலும் முறையிடப்படுவதில்லை என்ற நிலையில், ஈருடகப் படைவீரர்கள், பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் பகர்ந்திருந்த நிலையில், குறித்த பிரச்சினை கவனம் பெற்றிருந்தது.
தரவுகள் உள்ள 2017ஆம் ஆண்டில், படைவீரர்கள் பாதிக்கப்பட்டவர்களோ அல்லது குற்றவியல் விசாரணைக்குட்பட்டவர்களாகவோ இருக்கின்ற 6,769 முறைப்பாடுகளை ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் பெற்றிருந்தது.
இந்நிலையில், வன்புணர்வுக் குற்றச்சட்டில், ஐக்கிய அமெரிக்க கடற்படையின் மூன்று உறுப்பினர்களை கைது செய்யதாக ஜோர்ஜியாவிலுள்ள அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago