Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 10 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து லொஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.
அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிக பட்சமாக மெக்ஸிகோவை சேர்ந்த 40 லட்சம் பேர் அங்கு சட்டவிரோதமாக தங்கி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த 7.25 லட்சம் பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அமெரிக்கா முழுவதும் நாள்தோறும் 3,000 பேர் கைது செய்யப்பட்டு அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மெக்ஸிகோவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுகின்றனர்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கையை கண்டித்து, கலிபோர்னியா மாகாணத்தின் லொலாஸ் ஏஞ்சலஸ் நகரில் கடந்த 3 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டங்களில் மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்று, ட்ரம்புக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர். போராட்டத்தின்போது, லொஸ் ஏஞ்சலஸ் முழுவதும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.
போராட்டக்காரர்கள் மீது லொஸ் ஏஞ்சலஸ் பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். போராட்டத்தை முன்னின்று நடத்திய 100 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்க அரசு சார்பில் தேசிய படையை சேர்ந்த 2,000 வீரர்கள் லொஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். கடற்படையை சேர்ந்த 500 வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். (a)
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025