2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

அரசாங்க முடகத்தைத் தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கினர்

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லைப் பாதுகாப்பு நிதியளிப்புத் தொடர்பில் தற்காலிக ஒப்பந்தமொன்றுக்கு வந்து, எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவிருந்த இன்னொரு பகுதியளவு அரசாங்க முடக்கத்தை தடுத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் பேரம்பேசுநர்கள் நேற்றுத் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த ஒப்பந்தமானது ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிய எல்லைச் சுவரொன்றுக்கான 5.7 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை உள்ளடக்கியிருக்கவில்லையென உதவியாளரொருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இவ்வாண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி வரைக்கும் எல்லைப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான நிதியளிப்புக்கான கொள்கையில் தாங்கள் ஒப்பந்தமொன்றை அடைந்துள்ளதாக குடியரசுக் கட்சியின் செனட்டர் றிச்சர்ட் ஷெல்பி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளபோதும் ஐக்கிய அமெரிக்க – மெக்ஸிக்க எல்லைச் சுவருகாக ட்ரம்ப் எவ்வித பணத்தையும் பெற்றுக் கொள்வாரா எனக் கூறவில்லை.

அந்தவகையில், குறித்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வரா என்பது தெளிவில்லாமல் உள்ளது. ட்ரம்பின் கோரிக்கை ஜனநாயகக் கட்சியினரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் 35 நாட்கள் பகுதியளவு அரசாங்க முடக்கம் ஏற்பட்டிருந்ததுடன், சுவருக்கான நிதியை ட்ரம்ப் பெறாமல் கடந்த மாத இறுதியில் அது முடிவுக்கு வந்திருந்தது.

இந்நிலையில், மேற்கூறப்பட்ட ஒப்பந்தமானது தெற்கு எல்லையுடன் புதிய வேலியை அமைப்பதற்காக 1.37 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்டிருக்கின்றது என உதவியாளரொருவர் கூறியுள்ளார். இதே தொகையையே கடந்த இரண்டு ஆண்டுகளிலும் காங்கிரஸ் ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X