Editorial / 2019 மார்ச் 05 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இட்லிப் மாகாணத்துக்கு அருகே, அன்சர் அல்-தெளஹித் ஆயுததாரிகளால் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட தாக்குதல்களில், சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான போராளிகள் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆயுததாரிகள் ஐந்து பேரும் கொல்லப்பட்டதாக, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தலைவர் றமி அப்டெல் ரஹ்மான் கூறியுள்ளார்.
வட மேற்கு சிரியாவிலும் இயங்குநிலையிலுள்ள பெரிய ஹுராஸ் அல்-டீன் குழுவுடன் தொடர்புகளை அன்சார் அல்-தெளஹீத் குழு கொண்டிருக்கின்ற நிலையில், சிரியாவில் அல்-கொய்தாவின் அரை உத்தியோகபூர்வ பிரிவுகளாக இவையிரண்டும் கருதப்படுகின்றன.
இட்லிப்பும் அதனுடன் கூடிய ஹமா, அலெப்போ மாகாணங்களின் சிறிய பகுதிகளில் பெரும்பாலானவை, மேற்குறித்த குழுக்களுக்கெதிரான ஹயாட் தஹ்ரிட் அல்-ஷாம் கூட்டமைப்பால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இக்கூட்டமைப்பானது, சிரியாவிலிருந்த அல்-கொய்தாவின் முன்னாள் போராளிகளாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஹமா மாகாணத்திலுள்ள கிராமமொன்றான மஸானாவிலுள்ள, சிரிய அரசாங்கத்தின் நிலைகள் மீதே அன்ஸார் அல்-தெளஹீத் தாக்குதல் நடத்தியதாக, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இட்லிப் மாகாணத்துக்கருகேயுள்ள தமது நிலைகளின் மீதான தாக்குதல்களில் படைவீரர்கள் கொல்லப்பட்டது, காயப்பட்டமையை, சிரிய அரச செய்தி முகவரகமான சனா மேற்கோள்காட்டிய இராணுவத் தகவல் மூலமொன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சில தாக்குதலாளிகளை, சிரிய அரசாங்கத்துக்கு விசுவாசமான படைகள் கொன்றதாக தகவல் மூலம் தெரிவித்தபோதும் எண்ணிக்கையைக் குறிபபிட்டிருக்கவில்லை.
இதேவேளை, சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸுக்கு வடமேற்காகவுள்ள லடாக்கியா மாகாணத்திலும் ஹயாட் தஹ்ரீர் அல்-ஷாம் ஆயுததாரிகளால், நேற்று முன்தினம் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவான போராளிகள் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமது இறுதியிடமான பக்கூஸினைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, சிரிய ஜனநாயகப் படைகளுக்கெதிராக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு கார்க் குண்டுத் தாகுதல்களை மேற்கொள்வதாக, ஐக்கிய அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் குறித்த படைகளின் போராளிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago