Editorial / 2019 மே 17 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவில் நாளை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வென்று ஆட்சிக்கு வரும் என பெரும்பான்மையாகப் பார்க்கப்படும் த கார்டியன் பத்திரிகையின் கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
தனது பொருளாதார உறுதிப்பாடு உறுதிமொழியின் மூலம் வாக்காளர்களைக் கவர்ந்திழுக்க ஆளும் பழமைவாதக் கட்சியின் பிரதமரான ஸ்கொட் மொறிஸன் தவறியுள்ள நிலையிலேயே, தொழிலாளர் கட்சி வெல்லும் என கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.
பிரதமர் ஸ்கொட் மொறிஸனின் கூட்டணி அரசாங்கத்தை விட 51.5-48.5 என்ற ரீதியில் தொழிலாளர் கட்சி முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பு வெளிக்காட்டியுள்ளது.
தொடர்ச்சியாக 28 ஆண்டுகள் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ள அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தை தொழிலாளர் கட்சி சேதப்படுத்தும் என்ற தனது பிரசாரச் செய்தி மூலம் வாக்காளர்களை பெரும்பாலும் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் ஈர்க்கவில்லை என்பதையே குறித்த கருத்துக்கணிப்பு வெளிக்காட்டுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் முதற்தடவையாக அவுஸ்திரேலியாவின் செலவை விட வரவு அதிகரித்த வரவு-செலவுத் திட்டத்தை தனது அரசாங்கம் வழங்கப் போவதை மையப்படுத்தியே தனது பிரசாரத்தை ஸ்கொட் மொறிஸன் மேற்கொண்டிருந்தார்.
கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 2013, 2016ஆம் ஆண்டுகளில் தோற்றிருந்த தொழிலாளர் கட்சி, அரசாங்கத்தின் 2019-20ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் செலவை விட வரவு அதிகரிப்பதைப் போன்று அதிகரிப்பதாக உறுதியளித்ததுடன், 2020-21ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் செலவை விட மிக அதிகமாக வரவு அதிகரிக்கும் படி செய்வதாகவும் கூறியிருந்தது.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago