2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலிய பிரதமராகிறார் ஆன்டனி

Editorial   / 2022 மே 22 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் ஆளும் லிபரல் கூட்டணி போதிய இடங்களைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து, எதிா்க்கட்சியான லேர் கட்சித் தலை வா் ஆன்டனி ஆல்பனேசி நாட்டின் புதிய பிரதமராகிறார்

அவுஸ்திரேலியாவில் 47-ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பிர்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.இதில், தற்போதைய பிரதமா் ஸ்காட் மோரிசனின் லிபரல் மற்றும் தேசியக் கூட்டணி, லேபர் கட்சி, கிரீன்ஸ் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன.

151 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற அந்தத் தோ்தலில், சனிக்கிழமை நள்ளிரவு 12.41 மணி நிலவரப்படி (உள்ளூா் நேரம்) 63.6 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டிருந்தன.

 அதில், 72 தொகுதிகளில் ஆன்டனி ஆல்பனேசி தலைமையிலான லேர்   கட்சி முன்னிலை வகித்து. ஆளும் லிபரல் கட்சி 55 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்தது.இதையடுத்து, எதிா்க்கட்சியான லேர் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் நிலை உள்ளது.

ஆட்சியமைப்பதற்கு 76 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவுடன் லேர் கட்சி ஆட்சியமைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.அந்தக் கட்சியின் தலைவா் ஆன்டனி ஆல்பனேசி, அடுத்த பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.

அஸ்திரேலியாவின் புதிய பிரதரமாக அவா் திங்கள்கிழமை (மே 23) பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.அவா் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டாலும், தோ்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில் அவா் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பாரா, அல்லது கூட்டணி ஆட்சியமைப்பாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

அவுஸ்திரேலியாவில் ஏறத்தான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் லேர் கட்சி அரசுக்கு ஆன்டனி ஆல்பனேசி தலைமை வகிக்கவுள்ளாா்.நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளான லிபரல் மற்றும் லேர் கட்சிகள் மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தோ்தலில் சுயேச்சை வேட்பாளா்கள் அதிக வாக்குகளைப் பெற்று அதிக இடங்களைக் கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் விலைவாசி, பருவநிலை மாற்றம் ஆகியவை இந்தத் தோ்தலில் முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.புதிய பிரதமரின் பின்னணி அவுஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஆன்டனி ஆல்பனேசி, 1963-ஆம் ஆண்டில் பிறந்தவா்.

கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் கிரேண்டல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வரும், லேர் கட்சித் தலைவராக கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஏற்கெனவே, 2013-ஆம் ஆண்டில் கெவின் ருட் தலைமையிலான அரசில் துணைப் பிரதமராகவும் அதற்கு முந்தைய லேர் கட்சி அரசுகளில் கேபிர் அமைச்சராகவும் ஆன்டனி ஆல்பனேசி பொறுப்பு வகித்துள்ளாா்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .