Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 11 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாம் பார்க்கும் அனைத்து விஷயங்களும் இப்போது டிஜிட்டல் மயமாகிவிட்டன. அதற்கு முக்கிய காரணம் இணையதளத்தில் பெரும் வளர்ச்சி தான்.
ஒருவரது அலைபேசியில் எந்த ஆப் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக யூடியூப் இருக்கும்.
இந்த செய்தி தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் இப்போது எல்லாம் யாருமே டிவி ரிமோட்டை தேடுவது இல்லை, நேராக youtube பக்கம் தான் செல்கின்றனர். சொல்லப்போனால் இப்போது பலரது வருவாய்க்கு youtube தான் காரணமாக இருக்கிறது.
பாகிஸ்தானில் இருக்கும் ஒரு கிராமத்தில் வீட்டிற்கு ஒரு youtuberகள் இருக்கின்றனராம். வயது வித்தியாசம் இன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் இப்படி youtube பிரபலங்களாக வலம் வருகின்றனர்.
இந்த கிராமத்தில் சுமார் 80 வீடுகள் இருக்கின்றன.
இவர்களும் பாகிஸ்தானை உள்ள பிறரை போல தான் வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் செய்யும் சில நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கின்றன. இந்த 80 வீடுகளிலும் வீட்டிற்கு ஒரு youtuber இருக்கின்றன ராம்.
கட்டுப்பாடுகள்:
வீட்டுக்கு ஒரு Youtuber இருந்தாலும், இவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகளும் இருக்கிறது. இவர்கள் போடும் வீடியோக்களில் பெண்கள் இடம்பெறுவதில்லை. மத ரீதியான காரணங்களுக்காக இந்த கிராமத்தில் இருக்கும் பெரியவர்கள் பெண்களை வீடியோவில் இடம் பெற அனுமதிப்பதில்லையாம்.
பல லட்சம் சப்ஸ்கிரைப்பர்ஸ்..
இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு youtuber-களுக்கும், பல லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு வருவாயும் அதிகமாக உள்ளதாம். இப்படி youtube மூலம் பிரபலமாக இருக்கும் ஒருவர் பேசுகையில், முன்னர் இருந்த தனது ஆண்டு வருமானத்தை பொது ஒரே நாளில் சம்பாதித்து விடுவதாக கூறுகிறார்.
கன்டென்டுகள் என்ன?
இந்த யூடியூப் அவர்கள் பெரும்பாலும் பக்தி மற்றும் கருணை தொடர்பான வீடியோக்களை பதிவிடுகின்றனர். இன்னொரு ஆச்சரியமான உண்மை என்றால் இங்கிருந்து அதிகம் சம்பாதிக்க வேண்டும் என வெளிநாடு சென்றவர்கள் மீண்டும் தங்களது தாய் நாட்டிற்கு திரும்ப வந்து வீடியோ பதிவிட்டு சம்பாதித்து வருகின்றனர்.
இதில் பெரும்பாலானோர் youtube ஆல் வழங்கப்படும் சில்வர் பட்டன் மற்றும் கோல்டன் பட்டனை சாதனைகளாக வீட்டில் அடுக்கி வைத்திருக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago