2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஆபாச நடிகை விவகாரம் :ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு

Freelancer   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த புகாரில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது குற்றவியல் (கிரிமினல்) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

2016 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு,   ஆபாசப் பட நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு  1,30,000 டொலர்கள் ​ட்ரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு மன்ஹாட்டன் நடுவர் மன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தற்போது ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சரணடைய வேண்டும், இல்லாவிடில் அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .