Editorial / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில், அந்நாட்டு அரசாங்கத்தின் பங்களிப்பின்றி எந்தவித முடிவுகளும் எடுக்கப்பட முடியாது எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி, இவ்விடயத்தில் முடிவெடுப்பவராக அரசாங்கமே இருக்குமெனவும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முதற்பகுதியாக, ஐ.அமெரிக்க அரசாங்கத்துக்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, கட்டாரில் இடம்பெற்றிருந்தது. அப்பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், ஆப்கான் எதிர்க்கட்சிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்றிருந்தன. இவையிரண்டிலும், ஆப்கான் அரசாங்கத்தின் பங்களிப்பு இருந்திருக்கவில்லை. இது, அரசாங்கத்தைக் கோபப்படுத்தியுள்ளது எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தொலைக்காட்சியொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி கானி, “எந்தச் சமாதான ஒப்பந்தத்தின் இறுதியிலும், ஆப்கானிஸ்தான் அரசாங்கமே முடிவெடுப்பவராக இருக்கும். நாட்டிலுள்ள எந்தச் சக்தியும், அரசாங்கத்தைக் கலைக்க முடியாது. எவரும் எம்மைத் தள்ளிவிட முடியாது என்பதில் உறுதியாக இருங்கள்” எனத் தெரிவித்தார்.
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025