2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆப்கானியர்களை பாதிக்கும் ஈரான்-தலிபான் பதற்றங்கள்

Freelancer   / 2022 மே 08 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எங்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று அவளது சமூக ஆர்வலரான கணவரைக் கொன்ற தலிபான் உறுப்பினர்கள், ஜஹ்ரா ஹுசைனிக்கு ஓர் ஒப்பந்தத்தை வழங்கினர்.

இதனையடுத்து, ஆப்கானை விட்டு தனது இரு சிறு குழந்தைகளுடன் தப்பி ஓட முடிவு செய்தார் வயதான ஹுசைனி.

சட்டமில்லாத சமதளப் பகுதிகள் வழியாக அவளும் குழந்தைகளும் ஈரானை அடையும் வரை நடந்தும் மோட்டார் சைக்கிள் மற்றும் டிரக் மூலமும் சென்றடைந்தனர்.

அமெரிக்கா துருப்புக்கள் வாபஸ் பெற்றதையடுத்து, தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ளது.

இதனையடுத்து, ஈரானுடனான 960 கிலோமீற்றர் நீளமான எல்லையானது, பணம் மற்றும் வேலைக்கான தேடலில் கடத்தல்காரர்களின் வாகனங்களில் குவிந்துள்ள ஆப்கானியர்களுக்கு உயிர்நாடியாக மாறியது.

கடந்த வாரங்களில், தலிபான்களுக்கும் ஈரானிய எல்லைக் காவலர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. மூன்று நகரங்களில் உள்ள ஆப்கானியர்கள் ஈரானுக்கு எதிராக திரண்டதுடன், ஈரானிய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தீவைத்தனர்.

ஈரானின் புனிதமான ஆலயத்தில் ஆப்கானிஸ்தான் குடியேற்றவாசிகள் நடத்தியதாகக் கூறப்படும் ஒரு கொடிய கத்திக் குத்து தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹுசைனியைப் போல எல்லை தாண்டிச் செல்லும் ஆப்கானியர்களுக்கு ஆபத்துகள் தனிப்பட்டவை என்று ஐக்கிய நாடுகளின் சமாதானத்துக்கான நிறுவகத்தின் மூத்த ஆப்கானிஸ்தானின் நிபுணர் ஆண்ட்ரூ வாட்கின்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஐ.நா. இடம்பெயர்வு அமைப்பின் கருத்துப்படி, தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, ஆப்கானிஸ்தான் குடியேறிகளை நாடு கடத்துவதை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், ஈரானின் நாடுகடத்தல்கள் ஒவ்வொரு மாதமும் 60% அதிகரித்ததாக ஐ.நா. இடம்பெயர்வு அமைப்பின் ஆப்கானிஸ்தான் பணியின் துணைத் தலைவர் ஆஷ்லே கார்ல் கூறினார்.

இந்த ஆண்டு ஈரானில் இருந்து திரும்பிய 251,000 பேரில் பலர் கடினமான பயணத்தின் காயங்கள் மற்றும் வடுக்களை சுமந்துள்ளனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .