Freelancer / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வைத்து பாகிஸ்தான் துருப்புக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானுக்குள் இருந்து, சர்வதேச எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் துருப்புக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இன்டர்-சேர்விசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி டான் செய்தி வெளியிட்டுள்ளது.
தமது இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு காரணமாக, பயங்கரவாதிகள் பலத்த இழப்புகளை சந்தித்துள்ளனர் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளதாக டான் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
ஆப்கான் மண்ணை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை நடத்த இடைக்கால ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அனுமதிக்காது என்று பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாகவும் டான் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .