2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஆப்கானிஸ்தானில் 30 பேர் பலி

Editorial   / 2019 ஜனவரி 08 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள தங்கச் சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில், குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர் என, அந்நாட்டு அதிகாரிகள், நேற்று முன்தினம் (06) தெரிவித்தனர். உயிரிழந்தோருக்கு மேலதிகமாக, 7 பேர் காயமடைந்தனர்.

படக்‌ஷான் மாகாணத்திலுள்ள கொஹிஸ்தான் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம், போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில், மேலுமோர் அழிவாக அமைந்துள்ளது.

ஆறொன்றில் பாரிய துளையொன்றைத் தோண்டி, தங்கத்தைத் தேடியபோதே, இவ்வனர்த்தம் ஏற்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X